நாமக்கல் அகில இந்திய முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணம்
நடந்து இன்றுடன் ஓராண்டு் நிறைவடைந்துள்ளது என்பதால்
அதைக் கொண்டாடும் வகையில் நாமக்கல் உழவர் சந்தை
அருகிலுள்ளமகாத்மா காந்தி அடிகள் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்துஇந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு கொண்டாட்ட ஊர்வலம் புறப்பட்டு ,நாமக்கல் சிலம்ப கவுண்டர் பூங்கா, பூங்கா சாலை , அம்மா உணவகம் , நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் திடல், எம்ஜிஆர் வரவேற்பு வளைவு, நாமக்கல் பேருந்து நிலையம் வழியாக வந்து
ஜவஹர்லால் நேரு மற்றும்பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்துநிறைவடைந்தது
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பி . ஏ. சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஓ. பி .சி .அணி மாநில துணைத்தலைவர் டாக்டர். வி .செந்தில், மூத்த காங்கிரஸ் பிரமுகர் வி.பி .வீரப்பன் நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவர் மோகன், ஆகியோர்கள் முன்னிலை வகித்த
இந்த ஊர்வலத்தில்
முன்னாள் மாவட்ட தலைவர் பாச்சல் சீனிவாசன், எருமைப்பட்டி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கராஜ் , இளங்கோ, ஜெகநாதன் பொறியாளர் பொன்முடி, நாமகிரிப்பேட்டை இளங்கோ , மோகனூர் சீனிவாசன் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பல்வேறு வாழ்த்து முழக்கங்களுடன் கலந்து கொண்டார்கள்.