வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கன்னி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா கடந்தமாதம் 29ந்தேதி செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு மதுரை மறைமாவட்டபேராயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில் அன்னையின் கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடந்தது.
முக்கியவிழாவான செப். 8.ல் வெள்ளிக்கிழமை.ஆரோக்கிய அன்னையின் பிறப்புப்பெ ருவிழா, இறைவார்த்தை சபை 148வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 23வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடந்தது. மாலை 5மணிக்கு நற்கருணை ஆராதனையும், 6மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத் திருப்பலியையும் தர்மபுரி மறைமாவட்ட மேதகுஆயர் லாரன்ஸ் பயஸ்துரைராஜ்; நடத்தினார்.
இரவு 7மணிக்கு வண்ணவிளக்குகள் மல்லிகை.மலர்களால் அலங்கரிக்கப்பட்ட. தேரில் பச்சைபட்டுடுத்தி ஆரோக்கியஅன்னை அருள் பாலித்தார். இந்த தேர்பவனி திருத்தலத்திலிருந்து புறப்பட்டு மகாராணிநகர், குலசேகரன்கோட்டைபிரிவு, இராமநாயக்கன்பட்டி, சந்தைபாலம், பேட்டைதலைவாசல், லாலாபஜார், பஸ்நிலையம் ஜெமினிபூங்கா, யூனியன்ஆபிஸ்பிரிவு, பழையநீதிமன்றம் சென்று மீண்டும் மதுரை திண்டுக்கல் சாலை வழியில் திருத்தலம் அடைந்தது.
நேற்று சனிக்கிழமை காலை 6.30 ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவுபெற்றது. இந்ததிருவிழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் வளன் எஸ்.வி.டி., நிர்வாகி ஆன்றனி வினோ எஸ்.வி.டி., உதவி பங்குதந்தை அடைக்கலராஜ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்குமக்கள் ஆகியோர் செய்தி ருந்தனர்.
இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ்இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் சப்இன்ஸ்பெக்டர்கள் மாயாண்டி, சேர்வை, உதயக்குமார், அழகர்சாமி உள்ளிடட போலீசார்கள் செய்திருந்தனர்.