கோவை கொடிசியா அரங்கில் ஆர்க்கிடெக்சர் மற்றும் இண்டீரியர் டிசைன் கண்காட்சியில் ஜி.சி.நிறுவனத்தின் அரங்கு பார்வையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது…

கோவை கொடிசியா வளாகத்தில் ஆர்க்கிடெக்சர் மற்றும் இண்டீரியர் டிசைன் கண்காட்சி செப்டம்பர் 8 ந்தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.இந்த கண்காட்சியில் வீடுகள் கட்டுவதற்கு தேவையான அலங்கார பொருட்கள் கட்டுமானத்தில் புதிய தொழில் நுட்பங்கள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,ஏ அரங்கில் அமைக்கப்பட்டுள்ள ஜி.சி.செராடைல்ஸ் நிறுவனத்தின் அரங்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது..

முன்னதாக ஜி.சி அரங்கின் துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக பிரபல சன் டிவி தொகுப்பாளினி மகாலட்சுமி,மிசஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற டாக்டர் காயத்ரி நடராஜன்,கோ க்ளாம் நிர்வாக இயக்குனர் ஹீனா ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்..

நிறுவனத்தின் செயல்பாடு குறித்து ஜி.சி.கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் வினால் பட்டேல் கூறுகையில்,குஜராத்தை தலைமையிடமாக கொண்ட எங்களது நிறுவனம்,36 கிளைகளை கொண்டு நாடு முழுவதும் இயங்கி வருவதாகவும்,சர்வதேச தரத்திலான அனைத்து விதமான டைல்ஸ் வகைகள்,சானிட்டரி வேர்ஸ்,உள்ளிட்ட வீட்டின் உள்கட்டமைப்பிற்கு தேவையானவற்றை தயார் செய்து சந்தையில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார்.

குறிப்பாக எங்களது ஜி்.சி.மிக்சிங் சிமெண்ட் கலவையுடன் சேர்த்து பயன்படுத்துவதால் டைல்ஸ் ஒட்டுவது மற்றும் சீலிங் பணிகளில் நல்ல தரம் கிடைப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *