கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற 44 வது ஆண்டு ஜூடோ போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று கோவை பெங்கலன் பப்ளிக் பள்ளி கோப்பையை கைப்பற்றியது..…

கோயம்புத்தூர் சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கூட்டமைப்பின் சார்பாக 44 வது ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.

சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவர்களின் கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட திறன்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்று வரும் தொடர்ச்சியாக,மாணவ,மாணவிகளுக்கான ஜூடோ போட்டிகள் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பெங்கலன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில்,கோவை,திருப்பூர,உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 17 சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் பள்ளிகளை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..

11,14,17,19 வயதிற்கு உட்பட்ட நான்கு பிரிவுகளாக மாணவர்களுக்கு தனியே,மாணவிகளுக்கு தனியே நடைபெற்ற இதில் மாணவ,மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை நிருபித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் 11 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் போட்டியில் முதல் இடத்தை ஆர்.கே.வி. பள்ளி மாணவி ரியா ஹர்ஷா பிடித்து தங்க பதக்கம் வென்றார்.

இதே போல மாணவர்களுக்கான பிரிவில்,பெங்க்லன் பப்ளிக் பள்ளி மாணவர் ஸ்ரீ சஞ்சய் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்.தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் காம்ப்ளக்ஸ் துணை தலைவர் மார்ட்டின்,இணை செயலாளர் சாம்சன் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஜூடோ சங்கத்தின் பொது செயலாளர் முரளி கலந்து கொண்டு அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு. பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் ஒட்டு மொத்த போட்டியில் அதிக புள்ளிகளை பெற்ற வென்ற பெங்கலன் பப்ளிக் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது..இந்நிகழ்ச்சியில், பெங்க்லன் மற்றும் லாரல் பள்ளிகளின் தாளாளர் ஃப்ராங்க் டேவிட்,இணை தாளாளர் மார்கரெட் தேவ கிருபை,நிர்வாக இயக்குனர் அபிஷேக் ஜாக்சன்,போட்டி ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *