வலங்கைமான் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ நேரில் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் குவளை வேலி ஊராட்சியில் ரூபாய் 172.42 லட்சம் மதிப்பீட்டில் கோரை ஆறு தலைப்பு, குவளை வேலி, வெண்ணாரு வங்கி சாலையில் நடைபெற்று வரும் காலை மேம்பாட்டு பணி,
நத்தங்குடி ஊராட்சியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதலாக கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள், ரூபாய் 74 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை, ரூபாய்13.50 லட்சம் மதிப்பீட்டில்அங்கன்வாடி மைய கட்டுமானப் பணி, பாப்பாக்குடி ஊராட்சியில் மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டி ரூபாய்1.50 லட்சம் மதிப்பீட்டில் குப்பை பிரித்தாளுக் கான கொட்டகை, கண்டி ஊர் ஊராட்சியில் ரூபாய்24.73லட்சம் மதிப்பீட்டில் பெரும்பார் கோயில் தெரு காலை மேம்பாட்டு பணி, ரூபாய்2.64 லட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் ஆகிய பணிகளை கலெக்டர் சாரு ஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதே போல் பாப்பாக்குடி ,ஆலங்குடி , சாரநத்தம் ஊராட்சிகளிலும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் . ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ், கமலராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.