நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் அதன் நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது
4756 லாரி உறுமையாளர்ளை உறுப்பினர்களாக கொண்ட இந்தத் சங்கங்களின் தேர்தலில்
4756 வாக்காளர்களை கொண்டு வாக்கு பதிவு இன்று காலை முதல் நடந்து வருகிறது
கடந்த வாரம் 29.30 ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது
தலைவர் பதவிக்கு அருள் மற்றும் சுப்புரத்தினமும், செயலாளர் பதவிக்கு ராஜா என்கிற ராஜ்குமார் மற்றும் மயில் ஆனந்தம், பொருளாளர் பதவிக்கு சரண் சேகர் மற்றும் ஸ்ரீரங்கன் போட்டியிடுகிறார்கள்.
இது தவிர இணைச்செயலாளர் துணைத் தலைவர் உள்ளிட்ட 60 செயற்குழு உறுப்பினர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்
இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்களான தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். எல் .எஸ்.சுந்தர்ராஜன் சின்னசாமி, பிரபாகர், ஆகியோர் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டு பரிசீலனை செய்த நிலையில் இன்று 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது
தேர்தல் வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது உறுப்பினர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குப்பதிவு செலுத்தி வருகின்றனர்
தலைவர் செயலாளர் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவை கேட்டு வாக்காளர்களிடம் கையேந்தி கும்பிட்டு வருகின்றனர்
காலை 9 மணி அளவில் ஆயிரம் வாக்குகள் பதிவு ஆகின நாமக்கல் சேலம் சாலையில் உள்ள தேர்தல் நடைபெறும் நாமக்கல் தாலுக்கா லாரி சங்க அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தேர்தல் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
ஓட்டு போட வசதியாக தேவையான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து உள்ளனர்
இன்று இரவு 8 மணிக்கு மேல் முடிவுகள் தெரிய வரும்