மாவட்ட அளவிலான கைபந்து போட்டியில் வெற்றி பெற்ற சிபிஎஸ்இ பள்ளி மாணசிகளுக்கு பாராட்டு விழா.
சோழவந்தான்
,மதுரை மாவட்ட அளவிலான. சி.பி.ஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் மதுரை வேத வித்யாஷ்ரம் சி.பி.ஸ்.இ பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டியில் கலந்து கொண்ட சோழவந்தான் அருகே அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்களில் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றனர்.
போட்டியில். வெற்றி பெற்ற மாணவிகளை, கல்வி சர்வேதேச பொதுபள்ளி தாளளார் செந்தில்குமார் கைப்பந்து பயிற்சியாளர் .அருண்குமார் மற்றும் பள்ளி முதல்வர் , ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வாழ்த்துக்ள் கூறி பாராட்டு தெரிவித்தனர்.