திருவாருரில் டெங்கு காய்ச்சல் தடுக்க விழிப்புணர்வு, சிவன்,பார்வதி,முருகன், விநாயகர், நாரதர் போன்ற வேடங்களில் மாணவ/மாணவிகள் பள்ளிக்கு வந்து விழிப்புணர் ஏற்படுத்தினர்,

வரும் திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு
திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளி மாணவ மாணவிகள் இன்று பள்ளிக்கு வரும் போது சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நாரதர், போன்று வேடமிட்டு வந்து அனைவரையும் அசத்தினார்கள் மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அனைத்து மாணவ/மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் விழிப்புணர்வில் வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், உடைந்த பொருள்கள் மற்றும் ஆட்டுக்கல் கொடக்கல், உடைத்த தேங்காய் முடி, போன்ற பொருள்களில் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற வாசகத்தை கூறி கொசு என்று அரக்கனை அழிக்க அனைவரும் ஒன்று பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் மேலும் காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்