வலங்கைமான் சி.பி. ஜி. ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் “நம் பள்ளியில் ஆசிரியரை கொண்டாடுவோம்” நிகழ்ச்சி நடைபெற்றது,
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டார்
நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முனைவர் ஜெய. இளங்கோவன் வரவேற்பு உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரமான ஆர். காமராஜ் தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி, சிறப்புரையாற்றி, பள்ளியின் ஆசிரியர்- ஆசிரியைகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்தினார்.
சிறப்புரையாக நகைச்சுவை பேச்சாளர் எஸ்.மோகனசுந்தரம், கல்வி ஆலோசகர் ஏ. சுகுமார் ஆகியோர் உரையாற்றினார்கள். பள்ளியின் தாளாளர் சி. பி .ஜி .அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ தலைவர் முனைவர் ஆர்.எஸ். செல்வம், ஆலோசனை குழு தலைவர் ஆர். குருமூர்த்தி, இணைத் தலைவர்கள் கே. சங்கர், பா. சிவனேசன்,எம். பக்கிர்மைதீன், துணைத் தலைவர்கள் யூ. இளவரசன் ,என்.பரத ஆழ்வார், க. பாலசுப்பிர மணியன் மற்றும் வலங்கைமான் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மாஸ்டர் ஜெயபால், கூட்டுறவு வங்கி தலைவர் சர. குணசேகரன், பள்ளியின் ஆசிரிய-ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் முதல்வர் சி வேலவன், துணை முதல்வர் ஆர். சசிரேகா ஆகியோர் நன்றி கூறினார்கள்.