கோவைக்கு வருகை தந்த அமைச்சர் முத்துசாமிக்கு நன்றி தெரிவித்த ரியல் எஸ்டேட் துறையினர்

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று மனை வரன்முறை சட்டத்தை மேலும் ஆறு மாதக்காலத்திற்கு நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவைக்கு வருகை புரிந்த தமிழக வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமியை சந்தித்து, ஃபேரா அமைப்பின் தேசிய துணை தலைவர் செந்தில்குமார் தலைமையில் நன்றி தெரிவிக்கப்பட்டது…

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் அவ்வமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி,விழாவில் கலந்து கொண்ட தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமியிடம் மனை வரன்முறை சட்டத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அவரின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் முத்துசாமியின் முயற்சியால் தமிழக அரசு மனை வரன்முறை சட்டத்தை ஆறு மாதத்திற்கு 29.2.2024 வரை நீடிப்பு செய்துள்ளது.இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் முத்துசாமியை ஃபேரா அமைப்பின் தேசிய துணை தலைவரும்,என் நிலம் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் செந்தில்குமார் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.

இதில் செயற்குழு உறுப்பினர் ஹேப்பி ஹோம் பாலசுப்பிரமணி,இந்துஸ்தான் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் ஆதவன் கருப்புசாமி,லையன் மோகன்ராஜ்,ஜெயம் லேண்ட் புரோமோட்டர்ஸ்,கண்ணன்,எஸ்கேடி புரமோட்டரஸ் செல்வகுமார்,கருப்புசாமி,எஸ்.கே.எம் புரமோட்டரஸ் சுரேஷ்குமார்,சைன்வுட் கார்த்திக்,டைல்ஸ்புரோ சந்தோஷ்,ஏஎஸ்ஆர் பில்டர்ஸ் ராஜேஷ் கோவை லைப் ஸ்டைல் அனந்தராமன், திருப்பூர் சுந்தர்,சிஜிஎன் பால்ராஜ், ஶ்ரீ கிருஷ்ணா புரோமோட்டர்ஸ் அய்யப்பன்,கோவை ரவீந்திரன்,லண்டன் ஶ்ரீராம்,போர் ரமேஷ்,பெரியநாயக்கன் பாளையம் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *