தென்காசி தெற்கு மாவட்டம், செங்கோட்டை நகர தி.மு.க.சார்பில்,செங்கோட்டை காவல் நிலையம் அருகிலுள்ள பேரறிஞர் அண்ணா அவரது திருவுருவ சிலைக்கு,செங்கோட்டை நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கு ஆட்டோவில் ஒலி பெருக்கி விளம்பரத்தை துவக்கி வைத்தும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தலைமையிலான கழக அரசின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும், இல்லங்கள் தோறும் வாசல்களின் முன்பாக வண்ணக்கோலங்களிட்டு தாயுள்ளம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சரை நன்றி பாராட்டியும் சிறப்பு செய்யப் பட்டது.
மேற்கண்ட அருமையான நிகழ்வுகளில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் மு.காதர் அண்ணாவி, சண்முகராஜா கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் ஆபத்துக்காத்தான், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செ.லிங்கராஜ் மாவட்ட மகளிர் அணி தலைவர் பேபி ரஜப் பாத்திமா, மாவட்ட மருத்துவர் அணி துணைத்தலைவர் மாரியப்பன், நகர அவைத் தலைவர் காளி நகர துணைச் செயலாளர்கள் ஜோதிமணி, முத்துசரோஜா, ராஜா நகர பொருளாளர்
கே.நடராஜன் மாவட்ட பிரதிநிதிகள் ஆ.பீர் முகம்மது, லெ.சுப்பிரமணியன், பொ.மணிகண்டன் பண்பொழி பேரூர் கழக செயலாளர் ராஜராஜன், வார்டு கழக செயலாளர்கள் பாலு, மாரியப்பன், கணபதி, இப்ராகிம், சேட் (எ) சேக்மதார்,கருப்பசாமி, வேலுமணி, குட்டி ராஜா, விஜி, தொமுச மணி, டைமண்ட் சலீம், அனுராகம் மாரியப்பன், பழனிச்சாமி, தமிழ் மணிகண்டன், பிரதிநிதிகள் துரைராஜ், காந்தி பாபு, மாரியப்பன், ஈஸ்வரமூர்த்தி, ஆ.சங்கர்கணேஷ், சன் சாகுல், மாது ரவீந்திரன், L.C.மனோஜ், பெமினா யூசுப், நாட்டாமை ஆறுமுகம், டைல்ஸ் மாரியப்பன், பெர்னாட்சா, ரெட் சரவணன், சுப்பிரமணியன், ஐயப்பசேகர், சட்டநாதன், வினோத், மதியழகன் கழக முன்னோடிகள் பில் கலெக்டர் வேலுச்சாமி, ராமசாமி, மாடசாமி ஆசிரியர், ஐயப்பன்,நாகராஜன், வேலுச்சாமி, சிவக்குமார்,டிரைவர் வேலுச்சாமி, முருகேசன்.மாரிச்செல்வம், அரவிந்த், மணிகண்டன் உள்பட கழக முன்னோடிகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.