எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க சார்பாக அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் சிறப்புரை :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க பேரூர் கழக செயலாளர் போகர் ரவி தலைமையில் அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது , மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச்சாளர் புரட்சி துரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.வி. பாரதி, மா .சக்தி, ராதாகிருஷ்ணன், சந்திரமோகன் மற்றும் சீர்காழி நகர செயலாளர் எல் வி.ஆர் வினோத், ஒன்றிய செயலாளர் நற்குணன், ஏ.கே .சந்திரசேகரன், சிவக்குமார், ஆதமங்கலம் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் திமுக ஆட்சியில் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் நிறுத்தப்பட்டது குறித்தும் மாவட்ட செயலாளர் பொது மக்களிடம் எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க வை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.