.கழுகுமலை வண்ணார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வண்ணார் ஊரணி கரையில் உள்ள ஸ்ரீ கன்னிவிநாயகர், வண்ணார் மாடசாமி,நாகம்மன், கருப்பசாமி கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 10 மணியளவில் திரளான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலமானது கீழபஜார், தெற்கு ரத வீதி, காவல் நிலைய சாலை, ஆறுமுகம் நகர் வழியாக சென்று ஆம்பல் ஊரணியை வந்தடைந்தது. பின்னர் அங்கு முளைப்பாரி கரைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை வண்ணார் சமுதாய பொதுமக்கள் மற்றும் இளைஞரணியினர் செய்திருந்தனர்.