கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்டான் மோர் சந்திப்பிற்கு செல்லும் தாலுகா அலுவலக சாலை புதுப்பிக்கும் பணி நகராட்சி மூலம் துரிதமாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில் அப்பகுதியில் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் பின்பு சம்பந்தப்பட்ட நகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் தரமான கலவைமூலம் நல்லமுறையில் சாலைப் பணியை செய்வதோடு விரைந்து பணியை முடித்து தரவும் அறிவுறுத்தியுள்ளனர் இந்த ஆய்வின் போது முன்னால் நகர்மன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் பலர் உடனிருந்தனர்