பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே லாரி மோதியதில் (ரூ. 1,50,000) ஒன்றை லட்சம் மதிப்பிலான மின்கம்பங்கள் முறிந்து சேதம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் ரயில் நிலையம் அருகில் பாபநாசத்தில் இருந்து அதி வேகமாக சென்ற லாரி சாலையில் உள்ள.மின் கம்பத்தில் மோதியது.
இதில் அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் முறிந்து சாய்ந்ததுஇதில் ஒன்றை லட்சம் ரூ.(1,50,000) மதிப்பிலான மின்கம்பங்கள் சேதம் ஏற்பட்டுள்ளது சாலையில் சாய்ந்த மின்கம்பத்தால் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு பாபநாசம் மின்சாரத்துறை அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து, சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தி பின்பு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது .
பின்பு மின்வாரிய ஊழியர்கள் தடைப்பட்ட மின்சாரத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மின் இணைப்பு தரப்பட்டது இது குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.