கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் திருமெய்யானம் கல்காணிவட்ட பாசன வாய்க்கால் தூர்வாரப்படாமல் ரூ.4.95 லட்சத்தில் தூர்வாரப்பட்டதாக கல்வெட்டு வைத்து முறைகேடு செய்வதாக கிராம மக்கள் குற்றசாட்டு….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட சாக்கோட்டை திருமெய்யானம் கல்காணிவட்ட பாசன வாய்க்கால் இரண்டு வருடங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது.

இந்நிலையில் திடீரென கிராமத்தில் உள்ள கல்காணிவட்ட பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டதாக ரூ. 4.95 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டதாகவும்,
1683 பணி ஆட்கள் வேலை செய்ததாகவும், ஒரு நபருக்கு ரூ. 294. சம்பளம் வழங்கியதாகவும்,மேலும் பணி தொடங்கிய தேதியை எழுதி முடிவுற்ற தேதியை எழுதாமல் கல்வெட்டு உள்ளாதாக திருமெய்யானம் கிராம மக்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்த அதிகாரிகளிடம் கிராம மக்கள் கேட்ட போது கழுத்தளவு தண்ணீர் உள்ள வாய்க்காலை திருமெய்யானம் கிராம மக்களே 100 நாள் வேலை ஆட்களை கொண்டு வேலை செய்யவேண்டும் என அதிகாரிகள் கூறியதாகவும் குற்றம் சாட்டுக்கின்றனர்.
மேலும் இது போன்று ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது தமிழக துறைரீதியான உடனடி நடவடிக்கை வேண்டும் என கிராம மக்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.