கோவையில் நடைபெற்ற ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்கத்தின் 11-வது மகாசபை கூட்டத்தில் ரெட்டி சமூகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்…
கோவை மாவட்ட ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்கத்தின் 11-வது மகாசபை கூட்டம் கோவையில் நடைபெற்றது…இதில், கல்வி,விளையாட்டு உள்ளிட்ட துறைகளில், மாநில அளவில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் கவுரவ தலைவர் பழனிசாமி, சென்னையில் உள்ள ராமசாமி ரெட்டியாரின் முழு உருவச் சிலையை வைக்க வேண்டும் என நீண்ட நாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவரது சொந்த ஊரான திண்டிவனத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு ஓ.பி.ராமசாமியின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்..இதே போல, ரெட்டி சமூகத்தில் உள்ள ஏழை பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் வகையி்ல்,ஓ.பி.சி.பிரிவில் இணைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மகாசபை கூட்டத்தில், கௌரவத் தலைவர் ராமசாமி, தலைவர் ஜெகநாதன், செயலாளர் நாகராஜ், பொருளாளர் ஆனந்தராஜ், உதவி தலைவர்கள் செல்வராஜ், பாலசுப்பிரமணியம், அனந்த சுப்பிரமணியம், உதவி செயலாளர்கள் கோகுல கிருஷ்ணன், மாணிக்கவாசகம், லோகநாதன், செய்தி தொடர்பாளர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காளிமுத்து, சுப்பிரமணியம், மூர்த்தி, ராஜேந்திரன், சரவணகுமார், ஜோதி குமார், மயில்சாமி,மற்றும் கௌரவ செயலாவர்கள் பழனிசாமி, நாராயணசாமி, ஜனார்த்தனன், வேலுசாமி, சந்திரன், சுப்பையன், அதிபதி,கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் மோகன்ராஜ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…