நாமக்கல்

தமிழ்நாடு தீயணைப்பு-மீட்புப்பணித்துறை இயக்குநர் அபாஷ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ச. உமா முன்னிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க 25.09.2023 இன்று காலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ மற்றும் மீட்பு படையினர் ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட தீ மற்றும் மீட்பு பணி படையினர் அலுவலர் உதவிமாவட்ட அலுவலர்கள், நிலைய அலுவலர் கு. செந்தில்குமார் தலைமையில் அலுவலர்கள் (இராசிபுரம், கொல்லிமலை, குமாரபாளையம், வெப்படை) மற்றும் பணியாளர்கள் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு

இரப்பர் படகு, லைப் பாய், லைப் ஜாக்கெட், மின்ரம்பம். ஹைட்ராலிக் கட்டர். LPG சிலிண்டர் தீவிபத்து, தீவகைகள் அணைப்பு முறைகள் மற்றும் பிற தளவாடங்கள் கொண்டு நடைபெற்ற தீ மற்றும் மீட்பு படை ஒத்திகை பயிற்சியில் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

இது எதிர்வரும் 2023-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஒன்றாகும். என்று விளக்கம் அளித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *