ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சிவகுருநாதன் வரவேற்புரையாற்றினார்மேலும் திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் சனல் குமார் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் விழிப்புணர்வோடு வாழ்வதற்கான வழிகள் குறித்து சிறப்புரையாற்றினார்

மேலும் மாணவர்களின் கல்வியும் எதிர்கால வாழ்க்கை இந்த சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கல்விக் குழுமத்தினுடைய இயக்குனரும் , மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியினுடைய தாளாளர் விஜய் சுந்தரம் உரையாற்றினார்
விழிப்புணர்வு ஏற்படுத்தி காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறை சார்ந்த அனைவருக்கும் திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமத்தினுடைய தாளாளர் டாக்டர் வெங்கட் ராஜலு செயலர் வி சுந்தர்ராஜ் முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் தமது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்கள் மேலும் திருவாரூர்
நகர காவல் நிலையத்தின் காவலர்கள் மற்றும் நேதாஜி கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மாணவ. மாணவிகள் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்