வலங்கைமான் அருகே உள்ள அரித்துவார மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயுஷ்மான் பவா மருத்துவ முகாம் அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சௌமியா தலைமையில் நடைபெற்றது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், அரித்து வரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர் கோபு, செவிலியர்கள் கலையரசி சுபாஸ்ரீ மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அதுசமயம் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள், காச நோய் மற்றும் தொழுநோய், விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து உடல் உறுப்பு தானம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.