பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.

மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமது மறைவுக்கு
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் .எச். ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்….

மலேசியாவில் வசித்து வந்த மூத்த தமிழ் இஸ்லாமிய அறிஞர் சை.பீர் முகமது மறைந்தார்என்ற செய்தியை அறிந்து மிகவும் துயர் அடைந்தேன்.

சிறந்த திறனாய்வாளர், இலக்கியப் பேச்சாளர், மனிதநேய பண்புமிக்கவர். தமிழ்படைப்பிலக்கிய துறையிலும் ஆய்வுத் துறையிலும் தொடர்ச்சியான பங்களிப்பு செய்தவர்.

மலேசியா இதழ்களில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் முன்னணி இதழ்களில் இவரதுகதைகள் வெளிவந்துள்ளன.

மலேசியாவில் இருந்து வெளிவந்த உதய சக்தி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்பல்வேறு விருதுகளைக் குவித்தவர்.

அவரது இறப்பு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இலக்கிய
ஆர்வலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *