கோவை குனியமுத்தூர் ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் மத்திய அரசின் புதிதாக பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு பணி நியமன கடிதங்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 46 இடங்களில் நடைபெறுகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஶ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற மேளா நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கோவை ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் அஞ்சல் துறை மத்திய கலத்துறை வங்கி மற்றும் இந்திய உணவுக் கழகம் போன்ற துறைகளில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 158 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

முன்னதாக காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பணி நியமன ஆணைகளை வழங்கி மத்திய அரசு பணியாளர்களிடையே இடையே உரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல்.முருகன் கூறியதாவது.

பிரதமர் ரோஜ்கர் மேளா அரசு வேலை என்பது ஒருவருக்கு கனவு எனவும் அரசு துறையில் வேலை எனவும் 2022 ஆக்ஸ்ட் மாதம் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேர் அரசு வேலை தருவதாக கூறினார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

8-வது ரோஜ்கர் மேளாவில் 8 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கியுள்ளது.பா.ஜ.க தலைமையில் இருக்கும் இடங்களில் வேலை வாய்ப்பு வழங்கபட்டு வருகிறது.டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் இணைக்கபட்டு 3 லட்சம் கோடி ரூபாயில் Infra Struture மத்திய அரசாங்கம் கொடுத்துள்ளது. அது போல் வந்தே பாரத் ரயில் சேவை,சந்திராயன் போன்ற விஷயங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

2047-ம் ஆண்டு பாரத தேசம் பெருமளவில் வளர்ச்சியில் இருக்கும் எனவும் 2014க்கு முன்பு 500 ஸ்டார்ட்அப் கம்பெனிகள் இருந்தது.தற்போது l ஒரு லட்சத்துக்கு மேல் ஸ்டார்ட்அப் கம்பெனிகள் உள்ளது. அதில் 30 வயது கீழ் உள்ள இளைஞர்கள் சி.இ.ஓ வாக உள்ளனர் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *