பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் மும்முனை மின்சாரம் செல்லும் மின்சார கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்தது..

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை நெடுந்தெருவில், மும்முனை மின்சாரம் செல்லும் மின்சார கம்பி ஒன்று தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை நடுவே எதிர்பாராத விதமாக திடீரென விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மின்சார வாரியத்தின் ஆக்க முகவர்இளங்கோவன் , மின் ஊழியர்கள் கார்த்தி, ஆனந்த் ஆகியோர் சாலையின் நடுவே கிடந்த, மின் கம்பியை பார்வையிட்டு உடனடியாக அந்தப் பகுதியில் வழியாக சென்ற மின்சாரத்தை துண்டித்து, சாலையின் நடுவே அறுந்து கிடந்த மின்சார ஒயரை சரி செய்தனர்.

இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *