பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.

பாபநாசத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பியை திருடிய 5 பேர் கைது …

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை மெயின்ரோட்டில் வசித்து வருபவர் முகமது நசீர் (வயது – 25)
இவர் திருப்பாலைத்துறையில் தஞ்சாவூர் – கும்பகோணம் மெயின் ரோட்டில் தமிழன் டிரேடர்ஸ் என்ற கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் கடந்த

  1. 2022 ஆம் தேதி இரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து 5 மர்ம ஆசாமிகள் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 5 டன் எடையுள்ள இரும்பு கம்புகளை லாரியில் திருடி கொண்டு சென்று விட்டனர் .

இது குறித்து கடையின் உரிமையாளர் முகமது நசீர் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி யின் காட்சிகள் கொண்டு மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வந்தனர்.

தஞ்சை எஸ். பி .ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் பாபநாசம் டி.எஸ்.பி பூரணி மேற்பார்வையில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், முத்துக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் இரும்பு கம்பிகளை திருடியவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.

போலீசாரை கண்டவுடன் ஓட முயன்ற போது 5 பேர்களையும் மடக்கிப்பிடித்து போலீசார் விசாரணை செய்தனர் .

விசாரணையில் திருப்பாலைத்துறை கட்டுமான பொருட்கள் விற்பனை கடையில் இரும்பு கம்பிகளை திருடியவர்கள் என்பது தெரிய வந்தது.

திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களான அய்யம்பேட்டை மணல்மேடு தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது 33) ,பசுபதி கோவில் காமராஜபுரம் முதல் தெருவை சேர்ந்த மணிகண்டன்( வயது 28. ),

காட்டுக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜமணிகண்டபூபதி ( வயது 24) ,திருக்காட்டுப்பள்ளி காமராஜர் காலனியை சேர்ந்த ஜே.பி (வயது – 36) ,திருச்சோற்றுத் துறை குடியானத் தெருவை சேர்ந்த நெருப்புக்குச்சி என்கின்ற மணிகண்டன் (வயது – 38) 5 பேர்களையும் பாபநாசம் போலீசார் கைது செய்து

5 டன் இரும்பு கம்பிகளை விற்ற இடங்களிலிருந்து பறிமுதல் செய்தும் திருட பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தும் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

பாபநாசம் மாஜிரேட் அப்துல் கனி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 5 நபர்களையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார் பின்னர் 5 பேரையும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *