மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் சார்பில் தேசியக் கருத்தரங்கம்

மருதம் நெல்லி கல்விக் குழுமம் , நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் மற்றும் வேதியியல் துறை இணைந்து இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளின் சமீபத்திய போக்கும் அதன் பயன்பாடும் என்ற பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியின் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார்.

ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.பரஞ்சோதி முன்னிலை வகித்தார் வேதியியல் துறையின் உதவிப் பேராசிரியர் சு.ரகுபதி நோக்கவுரை வழங்கினார்.

மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் நா.மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். ஜெயம் கல்லூரியின் வேதியியல் துறையின் தலைவர் மா.பாலாஜீ வரவேற்று பேசினார்.முதல் அமர்வில் சிறப்பு விருந்தினராக பெரியார் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் பேராசிரியர் முனைவர் பொ.அன்பரசன் இயற்பியல் புரிதலுக்கான அறிவியல் உயிர் வகைமை கட்டுதல் என்ற பொருண்மையில் கருத்துரை வழங்கினார்.

இரண்டாம் அமர்வில் பெரியார் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையின் பேராசிரியர் முனைவர் ராஜவேல் அன்றாட வாழ்வில் வேதியியல் பங்கு என்ற பொருண்மையில் கருத்துரை வழங்கினார்.
நிறைவாக இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் சி.தமிழரசு நன்றி கூறினார்.

நிகழ்வை கல்லூரி மாணவிகள் காவியா தாரணி,கீர்த்தனா தொகுத்து வழங்கினர்.

நிகழ்வில் இயற்பியல் துறை பேராசிரியர்கள் அறிவழகன், ராமராஜ், கோவிந்தராசு, ஹேமாவதி வேதியியல் துறை பேராசிரியர்கள் பெருமாள்,செளமியா, வேலாயுதம் மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *