வலங்கைமானில் இல்லம் தோறும் திமுக இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக அலுவலகத்தில், இல்லம்தோறும் திமுக இளைஞரணி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில், மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன் எம் எல் ஏ அறிவுறுத்தலின்படி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் நா. இளையராஜா வழிகாட்டுதலின்படி, வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, பேரூர் கழக செயலாளர் பா. சிவனேசன் ஆகியோர் தலைமையில், திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பனங்குடி ஏ. எஸ். குமார்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பி.தாஹிர் அலி, திருவாரூர் மாவட்ட துணை இளைஞர் அணி அமைப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில், நன்னிலம் சட்டமன்ற தொகுதியின் வலங்கைமான் ஒன்றியம், பேரூர் கழக இளைஞர் அணிக்கு இளைஞர் அணி அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், சார்புஅணியினர் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *