வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12 மற்றும் 13 வது பட்டமேற்பு விழா நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12 மற்றும் 13 வது பட்டமேற்பு விழா கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.சிவசுப்ரமணியன் தலைமையில் கோவை மண்டலம் கல்லூரிக் கல்வி இயக்குநர் முனைவர் வெ.கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரையாற்றினார் இந்த பட்டமேற்பு விழாவில் சுமார் 525 மாணவர்களுக்கு வழங்க இருந்த நிலையில் 485 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டு பட்டங்களை பெற்றுச்சென்றனர் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *