பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.

வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் மறைவுக்கு
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும்பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் .எச். ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்….

இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

பசுமை புரட்சி தந்தை என்று அனைவராலும் போற்றப்பட்டவர்.இந்திய விவசாயத்தை மேம்படுத்த புதிய வகை உணவு தானிய விதைகள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் விவசாய தொழில் நுட்பங்களை உருவாக்கி இந்திய விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.

சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் உள்ளிட்ட பல உயரிய விருதுகள் வென்றவர்.

விவசாயிகளின் தொடர் தற்கொலைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டார். குறைந்தபட்ச ஆதார விலையானது சராசரி உற்பத்தி செலவை காட்டிலும் 50 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை சமர்ப்பித்தது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று அவரது இறப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *