தமிழகத்தில் முதல் அன்னை தெரசா பங்கு ஆலயம் திறப்பு விழா! ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே வல்லனி என்ற இடத்தில் 4.5 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் முதல் முறையாக மிகப்பிரமாண்டமாய் கட்டி முடிக்கப்பட்டுள்ள அன்னை தெரசா ஆலயம் திறக்கப்பட்டது.

திறப்பு விழா நிகழ்ச்சியை முன்னிட்டு அந்த தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மதுரை உயர் மறை மாவட்ட பங்கு தந்தை அந்தோனி பாப்புசாமி, சிவகங்கை மாவட்ட முன்னாள் பங்குத் தந்தைகள் சூசை மாணிக்கம் உட்பட பல தேவாலயத்தின் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

அன்னை தெரசா பெயரில் தமிழகத்தில் உதயமாகும் முதல் தேவா ஆலயம் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே அமைந்துள்ளது என்பதால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்யப்பட்டது.

மத நல்லிணக்க நிகழ்ச்சியாக இதில் அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்றதால் அந்தப் பகுதி முழுவதும் விழா கோலம் கொண்டிருந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *