ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் அருகே மின்சார ஊழியர் கேங்மேன் பணியின் போது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சி ஐ டி யு மற்றும் உறவினர்கள் சாலை மறியல்

திருவாரூர் நகருக்கு உட்பட்ட துர்காலயா ரோடு சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு  மின்வாரிய அலுவலகத்தின் நகரப் பிரிவில் கேங் மேனாக பணியாற்றி வந்தவர் தமிழரசன் இவர் நேற்று மாலை திருவாரூர் பேபி டாக்கிஸ் சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்றில் ஏறி அப்பகுதியில் ஏற்பட்டிருந்த மின்சார விநியோக குளறுபடியை சீரமைப்பதற்கான  பணியில் ஈடுபட்டிருந்தார்

அப்போது எதிர்பாராத விதமாக  மின்கம்பத்தின் அருகே சென்ற உயர் அழுத்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழரசன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் மின்வாரியத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார் இவருக்கு அருள்மொழி வயது 28 என்கிற மனைவியும், நான்கு வயதில் ஒரு மகனும் மூன்று மாத ஆண்  குழந்தை ஒன்றும் உள்ளனர் .இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

அவரை மின்கம்பத்தில் ஏறி பணிபுரிய அறிவுறுத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட சிஐடியு மற்றும் சக ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் திருவாரூர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகில் திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதனையடுத்து திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன் உள்ளிட்ட காவல்துறையினர் வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அலுவலர்கள் திருவாரூர் மின்வாரிய செயற் பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்

பேச்சுவார்த்தையில் பணியின் போது உயிரிழந்த மின் வாரிய ஊழியருக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 250 க்கும் மேற்பட்ட சிஐடியு நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் மற்றும் ஊழியர்கள் திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் விளமல் என்கிற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக ஐந்து மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுதொடர்ந்து அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் இறந்த தமிழரசன் உடலுடன் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உறவினர்கள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்

மேலும் அதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தை உடன்பாட்டின் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிட பட்டது சாலை மறியல் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன் மாவட்டத் தலைவர் அனிபா பொருளாளர் மாலதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் லிஸ்ட் தமிழ் மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *