தென்காசி மாவட்டம். ஆலங்குளத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜிஆர்-ன் 36-வது நினைவு தினைத்தை முன்னிட்டு ஆலங்குளம் தெற்கு ஒன்றிய நகர அமமுக சார்பில் நினைவுஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் குருவை முருகன், நகர செயலாளர் சுப்பையா, ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
தென்காசி மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் தொகுதி பொருப்பாளருமான சந்திரசேகர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கழக நிர்வாகிகள்
அம்பை ரோடு ஆட்டோ நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட
புரட்சி தலைவர் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்வில்
மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் கண்ணன், மாவட்ட இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் தர்ஷினிமாரியப்பன், புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் கதிரவன் கிளை நிர்வாகி வேல்முருகன்
(எ) வேல், மற்றும் அம்பை ரோடு ஆட்டோ ஒட்டுநர் நல சங்கத்தினர், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.