மகிழ்வண்ணநாதபுரத்தில் திமுக, காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கினார் எம்.எல்.ஏ.
பழனிநாடார் ;-
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்
மகிழ்வண்ணநாதபுரத்தில் திமுக, காங்கிரஸ் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை பழனிநாடார் எம்.எல்.ஏ, வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரிலும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிவுறுத்தலின் பேரிலும் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பெத்தநாடார்பட்டி ஊராட்சி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திமுக, காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மகிழ்வண்ணநாதபுரத்தில் நடைபெற்றது.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பொருள்செல்வன், லட்டு (எ) ரத்தினசாமி, திமுக பொறியாளர்அணி துணை அமைப்பாளர் ஆல்பின்ராய், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், திமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் செல்லப்பா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.அறிவழகன், ஒன்றிய கவுன்சிலர் ராதாகுமாரி மாரிமுத்து, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதாதியாகராஜன், அமல்ராஜ், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் குமார்பாண்டியன், மகாராஜா,நகர தலைவர் சிங்ககுட்டி (எ) குமரேசன், சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.