பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் ஊரக உட்கோட்டத்தில் மணல் கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து முற்றிலும் ஒழிக்கப்படும் ., பாபநாசத்தில் புதிதாக பதவியேற்றுள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக த.அசோக் பதவி ஏற்றுள்ளார்.
இவர் ஏற்கனவே நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர்.
பாபநாசத்தில் பணியாற்றிய துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி சென்னைக்கு பணி மாறுதலில் சென்றுள்ளார் .
புதிதாக பதவியேற்றுள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் பத்திரிக்கை நிருபர்களிடம் கூறியதாவது ..
பாபநாசம் ஊரக உட்கோட்ட காவல் சரக பகுதிகளான பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை , அம்மாபேட்டை ,மெலட்டூர் ஆகிய பகுதிகளில் மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் , கட்டப்பஞ்சாயத்து முற்றிலும் ஒழிக்கப்படும், அடிக்கடி ஏற்படும் சாலை
விபத்துகளை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் , சாலை விதிகளை மீறிவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ,
உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டும் இலஞ்சிறார்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதியப்படும்.
காவல் சரக பகுதிகளில் தொடர்ந்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.
பாபநாசம் ஊரக உட்கோட்டத்தில் உள்ள காவல்துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் கொடுக்கின்ற மனுக்களை கனிவுடன் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாபநாசம் ஊரக உட்கோட்டத்தில் உள்ள பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் நேரில் சந்தித்து மனு கொடுக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.