பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை,அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்தும் மாபெரும் சிறுதானிய உணவு திருவிழா மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இதில் கம்பு கேழ்வரகு ராகி திணை சோளம் உள்ளிட்ட சிறுதானியங்களை பயன்படுத்தி பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களின் கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறந்த சிறு தானிய உணவு வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மற்றும் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் முன்னதாக கருத்தரங்கம், வாழ்த்துரை,யோகா, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றன.