அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் பேராமௌன்ட் டெக்ஸ்டைல் மில்ஸ் சார்பில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 12 அறைகள் கொண்ட நவீன கழிப்பறை கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு மதுரை மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ஹனிப் தயூப் தலைமை தாங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, ரோட்டரி கிளப் அட்மின் பொன்குமார், ரோட்டரி சமூக சேவை பொறுப்பாளர் பழனியப்பன், சமூக சேவகரும் தொழில் தொழிலதிபருமான இரா.பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலமேடு மடத்து கமிட்டி நிர்வாகி ராஜமாணிக்கம், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *