கும்பகோணம்
அருகே பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

வளர்ந்த இந்தியாவுக்கான சங்கல்ப யாத்திரை(‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’) என்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்தது.

பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.

அதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணம்
அருகே உள்ள வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங் கினார். தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஸ்குமார் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:- 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதமாக இந்தியா மாறிவிடும். வளர்ச்சி அடைந்த பாரதம் என்னவென்றால், ஏழை என்று யாரும் இருக்க கூடாது. அரசின் எல்லா திட்டங் களும் எல்லோருக்கும் வந்து இருக்க வேண்டும். அனைத்து மக்களும் கான்கிரீட் வீட்டில் இருக்க வேண்டும். விவசாயம் செய்வதற்கான எல்லா திட்டங்களையும் அவர்களின் வீட்டிற்கே கொண்டு வந்து கொடுத்து விட வேண்டும் ஆகியவை தான்.

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு விவசாயி மற்றும் மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் மத்திய அரசு மூலம் பெற்ற திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

அதில், ஒவ்வொருவரும் தங்களின் வாழ்வு எப்படி மாறி இருக்கிறது என சொன்னார்கள். 9 ஆண்டு காலம் முடிந்து 10-வது ஆண்டில் பிரதமர் மோடி ஆட்சியில் உள்ளார். பிரதமர் மோடியின் திட்டங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் மாற்ற ஆரம்பித்துள்ளது. இன்றைக்கு எல்லோருக்கும் எல்லா திட்டமும் வந்து விட்டதாக கூற முடியாது.

கிராமங்களில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் பேர் மத்திய அரசின் திட்டங்கள் தெரியாமல் இருக்கிறார்கள். இதற்காகத் தான் அதிகாரிகள் ஒவ்வொரு திட்டங்களையும் கிராமங்கள் தோறும் எடுத்துக்கூறி வருகிறார்கள்.

பூச்சி மருந்து தெளிக்கும் டிரோன் கைத்தெளிப்பான் மூலம் வயலில் பூச்சி மருந்து அடிப்பதால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் புற்றுநோய் அதிகமாக வருகிறது. இதனால் பிரதமர் மோடி யாருக்கும் புற்றுநோய் வரக் கூடாது என நினைக்கிறார்.

இதற்காகத்தான் இயற்கை சார்ந்த ரசாயனம் கலக்காத உரங்களை கொண்டு வந்து விவசாயிகள் அதன் மூலம் விவசாயிகள் செய்ய வேண்டும். மேலும் டிரோன் மூலம் மருந்து தெளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுக்கு தேவையான யூரியாவுக்கு என ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி மானிய தொகையை பிரதமர் மோடி ஓதுக்கீடு செய்துள்ளார். கிசான் அட்டை மூலம் 33 காசு வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம்.

இதனால் யாடரி மும் கந்து வட்டிக்கு வாங்க வேண்டாம். சாகுபடி முதல் உரம், பூச்சிக்கொல்லி, அறுவடை முடிந்து சந்தைக்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து செல வுகளுக்கும் கிசான் அட்டை மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மோடி என்றால் நம்பிக்கை. ஊழல் இல்லாத நாடாக இந்தியா மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க. வரதராஜன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சச்சில் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் வாசு, பொதுக்குழு உறுப்பி னர் சோழராஜன் மற்றும் மாவட்ட, மாநில, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *