அஞ்சலி” தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை காளவாசல் பகுதி பாத்திமா நகர் 1 வந்து தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் பொதுச் செயலாளர் சினி வினோத் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்க முன்னால் தலைவரும், தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் விருமன் கவிஞர் கருமாத்தூர் மணிமாறன், விஜய்டிவி கதாநாயகி சோ அட்சயா, செம்மீன் நடிகர் வெட்டுக்குமார், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், அப்பா பாலாஜி, துணைச் செயலாளர் மதுரை பாலா, வீரா, ஜில்லா சீனி, காசி மாயன், இளங்கோவன், கார்மேகம், பரவை மணி, சங்க மேலாளர் பாலா, கருங்காலக்குடி சந்துரு, பாடகி பத்மஜா, மகளிர் அணி தலைவி சுமதி, ராணி மற்றும் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *