தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமை சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம் மண்டல வாரியாக பிரித்து நடத்தப்பட்டு வருகிறது

அதன் ஒரு பகுதியாக 31/12/23 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகிலுள்ள சபிக் திருமண மண்டபத்தில் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது தஞ்சை மண்டலத்தை ஒருங்கிணைக்கும் விதமாக திருவாரூர் வடக்கு, திருவாரூர் தெற்கு தஞ்சை வடக்கு தஞ்சை தெற்கு மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கிளை நிர்வாகிகள் அணி செயலாளர் பேச்சாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இந்த நல்லொழுக்க பயிற்சி முகாமில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

மேலும் இந்த நல்லொழுக்க பயிற்சி முகாமில் மாநில துணை பொதுச் செயலாளர் தஞ்சை முஜிபுர் ரஹ்மான் பொருளாளர் காஞ்சி இபுராஹீம் மாநிலச் செயலாளர்கள் திருச்சி செய்யது காரைக்கால் யூசுப் அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *