திருவொற்றியூரில் 99 லட்சத்தில் 3 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புனிதபால் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார் கே.பி.சங்கர் எம் எல் ஏ 05.01.2024
சென்னை திருவொற்றியூர் 11வது வட்டத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்று வகுப்பறைகள் மூன்று அலுவலர் அறை மற்றும் கழிவறை உள்ளிட்டவற்றை 99 லட்சத்தில் கட்டுவதற்கான புதிய கட்டிடத்திற்கு
பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் குமார் முன்னிலையில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர்அடிக்கல் நாட்டினார்.
அப்பொழுது அங்கு ஏற்கனவே செயல்பட்டு வரும் பத்தாம் வகுப்புக்கான வகுப்பறையில் மின்தடை ஏற்பட்டுள்ளதையடுத்து காற்று மற்றும் வெளிச்சம் இன்றி மாணவ மாணவியர்கள் பாதிப்படைந்ததை கண்டு உடனடியாக மின் வசதி அளிக்க மின்வாரிய அலுவலர்களுடன் தொலைபேசியில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் சாத்தாங்காடு ஹை ரோட்டில் அமைந்துள்ள புனித பால் மேல்நிலைப்பள்ளியின் 11ஆம் வகுப்பு படித்துவரும் 57 மாணவர்கள் மற்றும் 34 மாணவியர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டியை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் பள்ளியின் உதவி தாளாளர் உதவி பங்கு தந்தை பென்னி லாரன்ஸ் முன்னிலையில் இன்று 05.01.2024 காலை வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தமிழ் தாய் வாழ்த்தும் இறுதியாக தேசியகீதம் பாடினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பன்னிரண்டாவது வட்ட மன்ற உறுப்பினர் வீ. கவி கணேசன், காலநிலை மாற்றம் குறித்து மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உரையாற்றினார்
தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் இங்கு படிக்கும் அனைவரும் ஒழுக்கத்தில் சிறந்த மாணவ மாணவியர்கள். நீங்கள் காலதாமதம் இன்றி பள்ளிக்கு வருகை தந்து உயர் கல்வி படித்து உங்கள் கனவுகளை நினைவாக்குவதற்காகவே இந்த விலையில்லா மிதிவண்டியை தமிழக அரசு சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கி வருகின்றார் என்றார். தொடர்ந்து சமீபத்தில் கம்போடியாவில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கிக் பாக்சிங் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற இப்பள்ளியின் 11ம் வகுப்பு மாணவன் எம் தேவா 2028 ல் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் அம்மாணவருக்கு பொன்னாடை போர்த்தி உதவித்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐ மார்டின் சகாயராஜ் உதவி தலைமை ஆசிரியை நிர்மலா
ஆகியோருடன்
தலைமை செயற்குழு உறுப்பினர் ராமநாதன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் இரா முருகேசன்,
மாமன்ற உறுப்பினர்கள் கே பி சொக்கலிங்கம் வீ கவி கணேசன் பானுமதி சந்தர் மற்றும் ஏகா கார்த்திகேயன் சந்தர் எஸ்டி சங்கர் ஆர்டி மதன்குமார் பி.எஸ்.சைலஸ் கே கார்த்திகேயன் குட்டி என்கின்ற எத்திராஜ் சந்தானகிருஷ்ணன் எழும்பூர் கோபி வாசு கருணாநிதி பால உமாபதி எஸ் கே இளங்கோ விஜயராகவன் ஜெகன் பிரேம்குமார் ராஜவேல் எம் எல் வேலன் கார்த்திக் அருண் அன்பு ரமேஷ் போட்டோ செந்தில் கே எஸ் ஆனந்தன் கருணாநிதி இரா. கணேசன் மணலி குமார் வினோத் பரணி குமார் முத்துராஜ் அன்பு சார்லஸ் கிருஷ்ணன் வாசுகி மீனா புனிதா ஹேமலதா சந்திரலேகா உள்ளிட்டவர்களுடன் புனித பால் மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்