பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-1 சார்பில் எண்ணூர் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் அனைத்து துறைகள் சார்பில் எண்ணூர் வியாபாரிகள் சங்கம் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
எண்ணூர் வியாபாரிகள் சங்கத்தில் நடைபெற்ற முகாமில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் தொடங்கி வைத்தார் இதில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்கக்கோரிமனுக்களை அளித்தனர்
அதனை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் 30 நாட்களுக்குள் தீர்வு காணுவதாக தெரிவித்தார்
பின்னர் 1வது மண்டல குழு தலைவர் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் திரு. தி.மு.தனியரசு கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார் மற்றும் அப் பகுதி மக்கள் தங்களின் குறைகள் மற்றும் தேவைகளை மனுவாக வழங்கினர்*
நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் மு.சிவக்குமார் மண்டல அலுவலர் நவேந்திரன், செயற் பொறியாளர் சகுபர் உசேன்,முருகவேல், சுகாதார துறை ( AHO ) ரீணா, உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர் ஜெயக்குமார் பாபு நமச்சிவாயம் ஆனந்த ராவ் கோதண்டராமன் அனீஸ் குமார். இளநிலை பொறியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்