சத்தியமங்கலத்தில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சியினர் சார்பில் மௌன ஊர்வலம் நடந்தது.
ஊர்வலம் கோட்டு வீராம்பாளையத்தில் இருந்து சத்தி ஒன்றிய செயலாளர் சஜித், நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு ஊர்வலம் சென்றனார். ஊர்வலம் பழைய பஸ் நிலையம் முன் நிறைவடைந்தது.
தேமுதிக தொண்டர்கள் 5 பேர் விஜய் காந்த் மறைவிற்கு மொட்டை அடித்தனர்.தொடர்ந்து அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உருவப்படத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் பி கே சுப்பிரமணி தலைமையில் அனைத்து கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் கண்ணன், நிர்வாகிகள் கணேசன், ஆறுமுகம், பாக்யா, திமுக சார்பில் நகர மன்ற தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே. சி. பி. இளங்கோ, அதிமுக நகர செயலாளர் ஓ .எம். சுப்பிரமணியம், காங்கிரஸ் சார்பில் ஸ்ரீராம் பாமக மாவட்ட செயலாளர் ராஜா , பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் செல்வராஜ் , கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்டாலின் சிவகுமார், திருத்தணிகசலம், அமுமுக மாவட்ட செயலாளர் சரவணக்குமார், திராவிட வீரன் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்