தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.
ஜோ.லியோ.
பழைய பெண்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
தமிழக அரசுக்கு கோரிக்கை
தஞ்சாவூர், ஜன.7- தஞ்சை மருந்து வணிக பிரதிநிதிகள் சங்க அலுவலகக் கட்டிடத்தில் தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு டிட்டோ ஜாக்- மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில முன்னுரிமை அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இளநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 11-ந் தேதி அன்று அனைத்து வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மிகவும் எழுச்சியாக நடத்துவது.
அதே மாதம் 26-ந் தேதி அன்று மாவட்ட அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மதியழகன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குழந்தைசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட பொருளாளர் முத்துவேல், தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் சூசை ஆரோக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழக ஆரம்பப்பள்ளி மாவட்ட செயலாளர் குமார் நன்றி கூறினார்.