ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் தலையாமங்கலம் ஊராட்சியில் வரி வசூல் கடைபிடித்தல் குறித்த விழிப்புணர்வு முகாம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் தலையாமங்கலம் ஊராட்சியில் வரி வசூல் கடைபிடித்தல் குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் உடனிருந்தார்
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
ஊராட்சிகளிலுள்ள அனைவரும் வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில்வரி ஆகியவற்றை தவறாது செலுத்த வேண்டும் தவறாமல் செலுத்தினால் தான் ஊராட்சிக்கு வேண்டிய நிதியை அரசிடமிருந்து பெறமுடியும். அதன்மூலம் நமது ஊராட்சிகளின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.
நிகழ்வில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சௌந்தரியா ஊராட்சிமன்றத்தலைவர் கலைவாணி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிகள் பங்கேற்றனர்