பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டியில் கலந்து கொண்ட கோவை ஸ்டேபில்ஸ் பயிற்சி மைய மாணவ,மாணவிகள் 13 பதக்கங்கள் பெற்று அசத்தியுள்ளனர்..

கோவை காளப்பட்டி டெக் பார்க் அருகில் கோவை ஸ்டேபில்ஸ் என்ற குதிரை பயிற்சி மையம் நடைபெற்று வருகிறது.

இந்த மையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ரகங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குதிரைகள் உள்ளன இங்கு 60க்கு மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில்,அண்மையில், 2023ம் ஆண்டுக்கான என் இ.சி பிரிலிம் & ஜூனியர் ஈக்வஸ்டேரீயன் சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூரில் நடைபெற்றது.

இதில் கோவை ஸ்டேபிள்ஸ் பள்ளியைச் சேர்ந்த ஆராதனா, ஆனந்த், ஹர்ஷித் ,அருண்குமார், விக்னேஷ், கிருஷ்ணா, பிரித்திவ், கிருஷ்ணா திவ்யேஷ், ராம் அர்ஜுன், சபரி ப்ரதிக் ராஜ், ஆதவ் கந்தசாமி ராம் ரெட்டி, அர்மான், தனிஷ்கா, ராகுல் ஆகிய 11 மாணவர்களும் மற்றும் 13 குதிரைகள் கலந்து கொண்டனர்.

இவர்களுடன், கோவை ஸ்டேபிள்ஸ் பள்ளியைச் சேர்ந்த செந்தில்நாதன் ஸ்ரீராம் சண்முகம் ஆகிய பயிற்சியாளர்களும் உடன் சென்றனர்
ஷோ ஜம்பிங் டிரசேஜ், ஈவன்டிங் என்ற மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் கோவை ஸ்டேபில்ஸ் பள்ளி மாணவர்கள் ஷோ ஜம்பிங் பிரிவில் கலந்து கொண்டு 2 தங்கப்பதக்கங்கள் 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 7 வெண்கலப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோவை ஸ்டேபிள்ஸ் நிறுவனர் சரவணன் கூறுகையில், “இந்தாண்டு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் நாடு முழுவதிலும் இருந்தும் 450க்கும் மேற்பட்ட குதிரைகளும், 250க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதில் எங்கள் பள்ளியைச் சேர்ந்த 2 மாணவிகள் மற்றும் 9 மாணவர்கள் என மொத்தம் 12
பேர் கலந்து கொண்டு 13 பதக்கங்களை வென்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே மாணவர்கள் பெல்ஜியத்தில் நடைபெற உள்ள உலக அளவிலான குதிரையேற்ற போட்டிக்கு தயாராகி வருவதாக கோவை ஸ்டேபில்ஸ் குதிரை பயிற்சி பள்ளி தெரிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு போபாலில் என் இ.சி பிரிலிம் & ஜூனியர் ஈக்வஸ்டேரீயன் சாம்பியன்ஷிப் போட்டியில் இதே மையத்தை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் கலந்து கொண்டு 6 பதக்கங்களை வென்றது குறிப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *