தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கல்;-
தென்காசி மாவட்டம் சேந்தமரம் அருகே அருணாசல புரத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் உடையார் முன்னிலையில் நடைபெற்றது.
உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி பேசிய தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது உறுப்பினர்கள் தங்களுடைய அடையாள அட்டையை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள் நாடார் சமுதாயத்தின் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் சமுதாய வரலாற்று ஆவணங்களை அழிய விடாமல் பாதுகாப்பது நமது கடமையாக நினைத்து செயல்பட வேண்டும் நம்முடைய சமுதாய மக்கள் பிள்ளைகளுக்கு பெருந்தலைவர் காமராஜரை பற்றி மட்டுமே சொல்லி கொடுக்கிறார்கள் சமுதாயத்திற்கு உழைத்த தலைவர்களை நினைத்து பார்ப்பதுமில்லை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதும் இல்லை சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட ராவ் பகதூர் ரத்தினசாமி நாடார் பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன் நாடார் போன்ற தலைவர்களையும் பொது வாழ்வில் நேர்மையாக தூய்மையாக வாழ்ந்த தலைவர்களை பற்றி வளரும் தலைமுறைக்கு பெற்றோர்கள் சொல்லி கொடுக்க வேண்டும்
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு தலைவர்களின் வரலாறுகளை புத்தகங்களாக அச்சிட்டு கொடுத்து வருகிறது
அதையும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று பேசினார் இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச் செயலாளர் டேவிட் நாடார் மாவட்ட இலக்கிய அணி தலைவர் ராமர் மதன் அய்யாகாளை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.