கோவை பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கலப்பு தற்காப்பு கலை போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

கோவை குணியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமியில் பாக்சிங்,ஜூடோ,கராத்தே,சிலம்பம் என பல்வேறு கலப்பு தற்காப்பு கலைகளை அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,மாநில அளவில் ஓபன் கலப்பு தற்காப்பு கலைகளுக்கான போட்டி கோவை நேரு தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் பிரேம் எம்.எம்.ஏ.பயிற்சி மையத்தின் நிறுவனர் பிரேம் மற்றும் செயலாளர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர்..

சிறப்பு விருந்தினராக நேரு தொழில்நுட்ப கல்லூரியின் தலைமை செயல் அதிகாரியும்,செயலாளரும் ஆன கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்,பிரேம் அகாடமியின் பிராங்க்ளின் பென்னி,கல்லூரியின் முதல்வர் சிவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் கலப்பு தற்காப்பு கலைகளாக கராத்தே,பாக்சிங்,ஜூடோ,மொயாத்தாய்,சிலம்பம் என பல்வேறு கலைகளை மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் செய்து அசத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 600 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *