கோவை
செல்போன் விளக்கை ஓளிர விட்டு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய பார்வையாளர்கள்.கோவை பேஷன் ஷோவில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்.

கட்சி பாகுபாடின்றி திரையுலகம் மட்டுமின்றி அனைவராலும் விரும்பபட்டவர் விஜயகாந்த்.இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், கடந்த டிசம்பர் 28ம் தேதி இறந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..
இந்நிலையில் கோவை காளப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சியில் மறைந்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது..
மேடையில் அவரது படத்திற்கு மாடல்கள் மட்டுமின்றி குழந்தைகளும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்..
இந்நிலையில் பேஷன் ஷோவை காண வந்த பார்வையாளர்கள் தங்களது செல்போன் விளக்குகளை ஒளிர விட்டு அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..இது குறித்து நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர் ராஜா கூறுகையில்,நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த அஞ்சலி கூட்டத்தை நடத்தியதாகவும்,ஆனால் இது நெகிழ்ச்சியான தருணமாக மாறியது விஜயகாந்தின் மீது மக்கள் வைத்துள்ள அன்பையே காட்டுவதாக அவர் நெகிழ்வுடன் கூறினார்.