எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி சுற்று வட்டார பகுதியில் கனமழையினால் 20,000 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் கவலை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாககடந்த இரண்டு நாட்களாக கன மழை பொழிந்து வருகிறது.
சீர்காழி பகுதியில் 22 சென்டிமீட்டர் கொள்ளிடத்தில் 18 சென்டிமீட்டரும் மழை பதிவானதால் இரவு முழுவதும் மழைதொடந்து பொழிந்து வந்தது. கொள்ளிடம்.
ஆர்ப்பாக்கம், பச்சை பெருமாநல்லூர் ,மாதானம், மத்தளம்மடியான் ,புளிச்சக்காடு ,உமையாள்பதி உள்ளிட்டா கிராமங்களில் 20,000 ஏக்கர் நிலப்பரப்பிலசம்பா சாகுபடி செய்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விவசாயிகள் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீரில் மூழ்கி இருப்பதால் நெற்கதிர்கள் முளைக்கத் தொடங்கியுள்ளது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது. இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்ய கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு அதிக செலவு செய்து விவசாய பணிகளை மேற்கொண்டும் ஆனால் அடிக்கடி கனமழை பொழிந்து வந்ததால் சம்பா பயிர்களை அதிக செலவு செய்து பாதுகாத்து வந்த நிலையில் தற்பொழுது கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையினால் சம்பா பயிர் அறுவடைக்கு தயாராக நிலையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராம பகுதியில் சரியான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வடிய வழியின்றி விளைநிலங்களில் மழைநீர்தேங்கி நிற்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. சம்பா சாகுபடிக்கு அதிக அளவில் செலவு செய்தும் அதனை அறுவடை செய்ய முடியாத நிலையில் மிகவும் கவலை அடைந்த நிலையில் உள்ளோம். எனவே அரசு பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து உறிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.