மழையால் பாதிக்கப்பட்ட பாவாணன் நகர் மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா நலத்திட்ட உதவிகள் வழங்கினார் !

புதுச்சேரி பாவாணன் நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது.

இதனால் நகரின் தாழ்வான பகுதிய பாவணன் நகரில் மழை நீருடன், கழிநீர் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

தொடர்ந்து கதிர்காமம் தொகுதி செயலாளர் வடிவேலு ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், பிரட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தொகுதி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர்கள் தங்க தமிழ்வாணன், சக்திவேல், தொகுதி துணைச் செயலாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர், உமேஷ் இளைஞர் அணி இசைமணி, பொருளாளர் நசீர், கலைஞர் ஆட்டோ சங்க நிர்வாகி செந்தில்குமார், கிளைக் கழக செயலாளர் சிவபெருமான், கார்த்திகேயன், விடுதலை சிறுத்தை கட்சி தொகுதி பொறுப்பாளர் சந்துரு, கிள்ளிவளவன், ராஜா, செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *