இறந்தவரின் உடலை விளை நிலங்களில் கொண்டும் செல்லும் உறவினர்கள்

தென்காசி

நாடு சுதந்திரம் பெற்றும் எங்களுக்கு சுதந்திர கிடைக்கவில்லை என
இறந்தவரின் உடலை கொண்டு செல்ல மயனப்பாதை இல்லாமல் அவதியுறும் காவலாக்குறிச்சி கிராம மக்கள் வேதனையினை தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் காவலாகுறிச்சி கிராமத்தில் ஆர்சி கோவில் தெருவை சார்ந்த அமிர்தம் இவரது மகன் அந்தோணி (வயது 75) முன்னாள் ஆசிரியாராக பணி ஒய்வு பெற்ற இவர்
வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார்.

இவரது உடலை நல்ல அடக்கம் செய்ய உறவினர்கள் தோளில் சுமந்தவாறு மாயனத்திற்கு உடலை கொண்டு சொல்ல சீரான பாதை இல்லாமல் நெல் பயிர்கள் பயிரிடப்பட்ட விவசாய நிலத்தில் வழியாக கொண்டு செல்லும் அவலநிலையை காண நேர்ந்தது.

இது குறித்து, அப்பகுதி ஒரு முதியவர் கூறும் போதும் நாடு சுதந்திரம் பெற்றும் எங்களுக்கு சுதந்திர கிடைக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது.
பல முறை மனு அளித்தும் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் கிராமத்தில் இறந்தவரின் உடலை கொண்ட செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம்.

தமிழக அரசு மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தனி கவனம் செலுத்தி தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு இறந்தவரின் உடலை கொண்டு செல்ல மயனப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *